உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகம் மாரியம்மன் கோவில் திருவிழா

தியாகதுருகம் மாரியம்மன் கோவில் திருவிழா

தியாகதுருகம்: தியாகதுருகம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  அருகில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவில் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று  முன்தினம் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார அர்ச்சனைகளும் நடந்தது.  தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இதையடுத்து தினமும் உற்சவர் அம்மன் திரு வீதி மற்றும் மாரியம்மன் சரித்திர பாரத பாடல் சொற்பொழிவும் நடக்கிறது.  வரும் 24ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !