உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்தி கோவிலில் குரங்குகள் அட்டகாசம் பக்தர்கள் அதிருப்தி

தட்சிணாமூர்த்தி கோவிலில் குரங்குகள் அட்டகாசம் பக்தர்கள் அதிருப்தி

வாலாஜாபாத்: கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில், குரங்குகளின் அட்டகாசம், பக்தர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சியில், தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், 20க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. பக்தர்கள் எடுத்து வரும் பூஜைப் பொருட்களை, குரங்குகள் கூட்டமாக வந்து பறித்து செல்கின்றன.இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், குரங்குகள் கூட்டமாக வந்து கையில் வைத்திருக்கும் தேங்காய் பழங்களை பறித்து செல்கின்றன. கோவில் நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இதுகுறித்து, கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், குரங்குகளை பிடிக்க வன துறைக்கு பரிந்துரை செய்து உள்ளோம்; இருப்பினும், நடவடிக்கை இல்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !