உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12 மணி நேரம் சிவநாம வழிபாடு

12 மணி நேரம் சிவநாம வழிபாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நடந்த, 12 மணி நேர சிவநாம கூட்டு வழிபாட்டில், ஏராளமானோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், நேற்று காலை, 6 மணி முதல் மாலை, 6 மணி வரை, 12 மணி நேரம், சிவநாம ஜெபம் மற்றும் கூட்டு வழிபாடு நடந்தது. உளுந்தூர்பேட்டை அப்பர் சுவாமிகள் திருமடம் சைவ ஆதினம் சிவஞான தேசிக சுவாமிகள், கந்திகுப்பம், பைரவ நிலையம் பைரவ சுவாமிகள் தலைமை வகித்தனர்.நேற்று காலை, 4 மணிக்கு, காரகுப்பம் மாதேஷ் நாதஸ்வர இன்னிசை குழுவினரின் மங்கள வாத்தியம் நிகழ்ச்சியும், காலை, 5 மணிக்கு, திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும், வேள்வி பூஜையும் நடந்தது. இந்த திருவிளக்கினை வரதம்மாள் தேவராஜ், ஜெயக்கொடி திம்மிசெட்டி, சித்ரா ரவி, சுமதி ராஜேந்திரன், ராணி ராஜா ஆகியோர் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து, சிவத்திரு முருகு, இளவேனில் தமிழ் வேள்வி பூஜை நடந்தது. பர்கூர் சரவணகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பர்கூர் துரைசாமி, வீரமணி, கோவிந்தராஜ், சீனிவாசன், பாண்டியன், சுமதி, ராமன், கோவர்த்தன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !