உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்மாரி பொழிய அம்மனுக்கு முளைப்பாரி !

மும்மாரி பொழிய அம்மனுக்கு முளைப்பாரி !

ராமநாதபுரம்: உலக சமநிலை பெறவேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் எனில் மாதம் மும்மாரி பொழிந்து விவசாயம் செழிக்க ÷ வண்டும். மாதங்கள் 12 இருக்க... அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடியில் விவசாய பணிகள் துவங்குகின்றன. விளை நிலங்களில் அமோக மகசூலு க்கு கிராமப்புறங்களில்  முளைப்பாரி விழா நடத்தி அம்மனை குளிர்விப்பதுண்டு. ராமநாதபுரம் மாவட்டத்தில் வைரவன்கோயில் கூனி மாரியம்மன்,  உச்சிப்புளி நாகாச்சி உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோயில், ராமநாதபுரம் மாரியம்மன் கோயில்களில் இரு வார விழாக்கள் பிரசித்தி பெற்றவை.  உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் களிமண் பானையில் கரகம் எடுத்து முளைப்பாரி சுமந்த பெண்களுடன்  ஊர்வலமாகச் சென்று வைகை ஆற்று முகத்துவாரத்தில் கரைப்பர்.  மாவட்டத்தில் மேலும் 300க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களிலும் முளைப் பாரி விழா புராட்டாசி கடைசி வரையிலும் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !