உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லபி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா!

வல்லபி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா!

சிதம்பரம்: சிதம்பரம் வல்லபி மாரியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இக் கோவிலில் 67வது ஆடி மாத தீமிதி மகோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி சுவாமிக்கு தினமும் சிறப்பு  அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை அம்மன் புறப்பாடும் நடந்தது. இரவு காத்தவராயன் கதை சொற்பொழிவு நடந்தது. இதனைத்  தொடர்ந்து நேற்று முன்தினம் தீ மிதி உற்சவத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. காலையில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வல்லபி மாரியம்மனுக்கு காவடி எடுத்தும் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை பக்தர்கள் பாலமான்  கரையில் பூங்கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாகச் சென்று கோவில் தீக்குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !