கீரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா!
ADDED :3737 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஊ.கீரனூர் ஏரிகரை ஸ்ரீகீரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது.பழமை வாய்ந்த இக்கோவிலில், 100 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 17ம் தேதி கீரியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன், வீதியுலா நடந்தது. விழாவையொட்டி காலை 8.30 மணிக்கு 21 பம்பைகள், ராஜமேளம் முழங்க ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் இருந்து சுவாமி வீதியுலா புறப்பட்டது.காலை 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாரதனைகள் நடந்தது. பின்னர், உளுந்தூர்பேட்டை, ஊ.கீரனூர், அரளி, பாண்டூர், கொணலவாடி, மங்கலம்பேட்டை, மூலசமுத்திரம் பகுதி மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வைத்தியநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.