எல்லையம்மன் கோவிலில் ஆடிமாத திருவிழா!
ADDED :3737 days ago
மயிலம்: கூட்டேரிப்பட்டு எல்லையம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது. கூட்டேரிப்பட்டு எல்லையம்மன் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு குளக்கரையிலிருந்து பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். பகல் 12:00 மணிக்கு வேண்டுதலுக்காக பக்தர்கள் அலகு, எலுமிச்சம் பழத்தை உடலில் குத்திக் கொண்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. மாலை 3:00 மணிக்கு ஏராளமான கிராம பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு படையலிட்டனர். மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.