உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணுடைய நாயகியும் ஆடி முளைக்கொட்டும்!

கண்ணுடைய நாயகியும் ஆடி முளைக்கொட்டும்!

நாட்டரசன்கோட்டை: முன்னோர்கள் சொல்படி, ஆடியில் விதைத்து, நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் விளைநிலங்களில்  நல்ல விளைச்சல் வேண்டி முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். அந்த வகையில், நாட்டரசன்கோட்டை கண்ணுடைநாயகி அம் மன் கோயிலில், ஜூலை 23ல் காப்பு கட்டுடன் ஆடி முளைக்கொட்டு திருவிழா துவங்கும். பத்து நாட்கள் வரை தினமும் அம்மன் வீதி உலா வரு வார். ஜூலை 31 வெள்ளியன்று, இரவு சர்வ அலங்காரத்தில் காட்சி அளிக்கும் அம்மன், தலையில் தங்க பாத்திரத்தில் முளைப்பாரியை சுமந்து காட்சி  தருவார். இதற்காக, காப்பு கட்டு அன்று இரவு 7 மணிக்கு, முளைப்பாரிக்காக விதை விதைப்பர். தங்க மரக்கா வில் முளைப்பாரியை தலையில் சுமந் தவாறே அம்மன் வீதி உலா வருவார். அம்மனுடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்தி செலுத்துவர். ஆகஸ்ட் 1ம் தேதி  முளைப்பாரியை கோயில் தெப்பக்குளத்தில் கரைப்பர். ஆடியில் முளைப்பாரி எடுப்பதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !