ஆனந்தவல்லியம்மன் கோயிலில் 29ல் ஆடித்தபசு!
ADDED :3811 days ago
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள் நடை பெறும் விழாவில் முதல் நாள் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தினசரி பல்வேறு மண்டகப்படிதாரர்களின் சார்பில் எழுந்தருளுகிறார்.28ம் தேதி புஷ்ப பல்லக்கில் வலம் வருகிறார். ஆடித்தபசு 29ம் தேதி நடை பெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் வேலுச்சாமி,அழகியசுந்தரபட்டர் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.