ஷீரடி சாய் அன்னதானபாபா கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை!
கோபி: கோபியில் ஷீரடி சாய் அன்னதான பாபா கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. கோபி, கரட்டடிபாளையம், பங்களாபுதூர் செல்லும் ரோட்டில் ஷீரடி சாய் அன்னதான பாபா கோவில் கட்டப்பட்டு, கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாபாவுக்கு தினமும் அலங்கார, ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்துக்குப்பின், 48வது நாள் மண்டல அபிஷேக பூஜை நடந்தது. அன்னதான பாபாவுக்கு, 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை, மலர் அலங்கார பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 31ம் தேதி இக்கோவிலில் முதன் முறையாக, குரு பூர்ணிமா விழா நடக்கிறது. பாபாவுக்கு மகா ஆரத்தி சிறப்பு பூஜையும், மாலையில் சத்திய நாராயணா பூஜையும், வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, குரு பூர்ணிமா பூஜை நடக்க உள்ளது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, ஸ்ரீஷீரடி சாய் அன்னதான பாபா ஆஸ்ரம டிரஸ்ட் நிர்வாகிகள் செய்கின்றனர்.