உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறையூர் நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

உறையூர் நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருச்சி: உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில், நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இன்று (25ம் தேதி) திருப்பாவாடை திருநாள் நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவிலின் உபகோவிலான, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில், நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. காலை, 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. காலை, 9.30 மணிக்கு திருமஞ்சனக்குடம் இறக்குதலும், காலை, 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தல் நடந்தது. மாலை, 5 மணிக்கு மங்களஹாரத்தி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். இன்று (25ம் தேதி) காலை, 7 மணிக்கு தளிகை எடுத்தல் நடக்கிறது. காலை, 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலுக்குப் பின் காலை, 11 மணிக்கு மேல் பொதுஜன சேவை மற்றும் பிரசாதம் விநியோகம் நடக்கிறது. அதனால் இன்று காலை, 11 மணி வரை பொது ஜனசேவை கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !