உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளங்காளி அம்மன் கோவிலில் ஆக., 2ல் பூமிதி திருவிழா

இளங்காளி அம்மன் கோவிலில் ஆக., 2ல் பூமிதி திருவிழா

மணவாள நகர் :மணவாள நகர் அருகே உள்ள இளங்காளி அம்மன் கோவிலில், வரும் 2ம் தேதி, பூமிதி திருவிழா நடைபெற உள்ளது.திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர் ரயில் நிலையம் அருகே உள்ளது, இளங்காளி அம்மன் கோவில். இந்த கோவிலில், 7ம் ஆண்டு ஆடித் திருவிழாவும், 2ம் ஆண்டு பூமிதி திருவிழாவும், வரும், 31ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு, அன்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், பந்தக்கால் நிகழ்ச்சியும் நடைபெறும். அதை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கொடியேற்றமும், மாலை 6:00 மணிக்கு பூ மிதிக்கும் பக்தர்களுக்கு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.பின், மறுநாளான ஆக., 1ம் தேதி காலை 8:00 மணிக்கு, பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜையும் நடைபெறும்.அதன்பின், 2ம் தேதி காலை 8:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தலும், மாலை 6:30 மணிக்கு பூமிதி வைபவமும், இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !