பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தேர் திருவிழா!
ADDED :3763 days ago
பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தேர் உற்சவத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் பி ரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகளும், இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. நேற்று செடல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது. அதனையொட்டி காலை அம்மனுக்கு, அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணிக்கு செடல் உற்சவமும், 2:00 மணியளவில் உற்சவர் அம்மன் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலை சுற்றி திருத்தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.