வாசவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :5203 days ago
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு திவ்யநாம பஜனை, பரத நாட்டியமும் நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை கணேஷ் குருக்கள் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அரசு கொறடா மோகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அரசு, வணிகர் பேரவை முத்துகருப்பன், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆர்ய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.