உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா!

காஞ்சிபுரம் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பெரியார் தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவில், நேற்று, அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.  காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் உள்ளது பெரியார் தெரு. இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு,  நேற்று காலை, சர்வ தீர்த்த குளத்தில் இருந்து, அம்மன் அலங்காரம் செய்து ஊர்வலமாக சென்றது. பிற்பகல் 1:00 மணிக்கு, கோவிலில் கூழ்வார்த்த லும்; மாலை 5:00 மணிக்கு, கோனேரிகுப்பம் பகுதியில் உள்ள கோவிலாத்தம்மன் கோவிலில், பகுதிவாசிகள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.  இரவு 9:00 மணிஅளவில் மாரியம்மன், கோவிலாத்தம்மன், மலர் அலங்காரத்தில் நான்கு ராஜவீதிகள் சுற்றி வந்து அருள்பாலித்தனர்.நள்ளிரவு 1:00  மணியளவில், சுவாமி கோவிலை சென்றடைந்தது. பின்னர், கும்பம் இட்டு, பகுதிவாசிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !