உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கருப்பராயன் கோவில் பொங்கல் விழா!

திருப்பூர் கருப்பராயன் கோவில் பொங்கல் விழா!

திருப்பூர்: எம்.எஸ்., நகர் கருப்பராயன் கோவில் பொங்கல் விழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.  திருப்பூர் எம்.எஸ்., நகர் ரவுண்டானா அரு கே நுõறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. கோவில் ஆண்டு விழா பூச்சாட்டுடன் துவங்கியது.  தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவில் வளாகத்தில், கிடாய்கள் வெட்டப்பட்டன. பெண்கள்  பொங்கல் வைத்து வழிபட்டனர். அதன்பின், கருப் பராய சுவாமிக்கு நடந்த உச்சி கால பூஜையில், சிறப்பு மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கன்னிமாருக்கு சிறப்பு பூஜை நடத்தப் பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !