உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பராமரிப்பற்ற நிலையில் அகஸ்திய தீர்த்த குளம்!

பராமரிப்பற்ற நிலையில் அகஸ்திய தீர்த்த குளம்!

சோழவரம்: பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவில் குளம் பொலிவிழந்து காணப்படுவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்து  உள்ளனர். சோழவரம்  அடுத்த, பஞ்செட்டி கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கிழக்கு பகுதியில், ‘அகஸ்திய தீர்த்தம்’ என, அழைக்கப்படும்  தீர்த்தக் குளம் உள்ளது. தற்போது, இந்த குளத்தின் படித்துறைகளில், புற்கள் முளைத்தும், குளத்தின் உட்பகுதியில் முள்செடிகள் வளர்ந்தும்,  பராமரிப்பு இன்றி, பொலிவிழந்து உள்ளது. குளத்தை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் குளத்தில் விடப்படுவதால், குளம், சாக்கடை போல காணப்படுகிறது. இதனால், கோவில் குளத்தை சீரமைக்கவும், குடியிருப்புகளின் கழிவுநீரை குளத்தில்  விடுவதை தடுக்கவும், நடவடிக்கை  எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !