உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முசிறியில் ஆடிப்பெருக்கு விழா

முசிறியில் ஆடிப்பெருக்கு விழா

முசிறி: முசிறியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஏராளமான பெண்கள், விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆடி பெருக்கை முன்னிட்டு அதிகாலை முதலே பெண்கள் குடும்பத்துடன் வழிபடத்து துவங்கினர். திருமணமான புதுமணத் தம்பதிகள், திருமணத்தின் போது தங்களுக்கு அணிவித்த மாலைகள் மற்றும் மங்கல பொருட்களை ஆற்றில் விட்டு, காவிரி தாயை வழிபட்டனர். மேலும், பெண்கள் முளைப்பாரி, வெற்றிலை பாக்கு, கருகமணி, அரிசி, வெல்லம் ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். திருமணம் ஆன பெண்கள் மூத்த சுமங்கலிகளிடம் காலில் விழுந்து ஆசி பெற்று, புதிய மஞ்சள் அணிந்து கொண்டனர். முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டா நடேசன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !