தூத்துக்குடி பனிமய மாதா சர்ச்திருவிழா: மாதா திரு உருவ பவனி!
ADDED :3731 days ago
துாத்துக்குடி: துாத்துக்குடியில் உள்ள பனிமய மாதா சர்ச் திருவிழாவில், மாதாவின் திரு உருவப்பவனி நடந்தது. லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் மாதா தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.துாத்துக்குடியில் உள்ள பனிமய மாதா சர்ச் திருவிழா ஆண்டு தோறும் ஆக., மாதம் நடக்கும். இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டு திருவிழா,ஜூலை 26 பிஷப் இவான்அம்புரோஸ் தலைமை யில் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று மாலை மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ, துாத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ், திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா ஆகியோர் பங்குபெறும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது.இரவு 7 மணிக்கு மாதாவின் சொரூபம் சப்பரத்திற்கு வந்தது. அங்கிருந்து திரு உருவப்பவனிமுக்கிய வீதிகள் வழியாக நடந்தது.