உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் பரவசம்!

கோவில்களில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் பரவசம்!

சேலம்: சேலம், மாரியம்மன், காளியம்மன் கோவில்களில், ஆடிப் பண்டிகையில், பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டும், உருளுதண்டம், அக்னி  குண்டம் இறங்கி பக்தர்கள் பரவசமாக நேர்த்திக் கடன் செலுத்தி, வழிபட்டனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவில், செவ்வாய்ப்பேட்டை  மாரியம்மன், குகை மாரியம்மன் காளியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், அம்மாபேட்டை பலபட்டரை  மாரியம்மன், பொன்னாம்மாபேட்டை மாரியம்மன், குமாரசாமிபேட்டை மாரியம்மன் உட்பட சேலம் மாநகர், புறநகர் பகுதியில் உள்ள மாரிய ம்மன், காளியம்மன் கோவில்களில் நேற்று ஆடிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று  முன்தினம் நள்ளிரவு முதல் பெண்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டதோடு, விடிய விடிய பொங்கல் வைத்தும், உரு ளுதண்டம் போட்டும், அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்தி வந்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். இன்றும் தொடர்ந்து பொங்கல், உரு ளுதண்டம் நடக்கிறது.

கோவிலில் பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ளும் வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டல இணை கமிஷனர் மங்கையர்க்கரசி,  உதவி கமிஷனர் ராமு, நிர்வாக அதிகாரி உமாதேவி ஆகியோர் கோவில் வளாகத்திலேயே முகாமிட்டு, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை  செய்து கொடுத்தனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று காலை பொங்கல், மாலையில் வெள்ளி வாகனத்தில் அம்மன்  திருவீதி உலா நடந்தது. இதில், திரளாக பக்தர்கள்  நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று காலையில் அம்மன் திருத்தேர் எழுந்தருளுகிறார்.  அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலில், உருளுதண்டம், பொங்கல், மாலையில் அலகு குத்தி ஊர்வலம் ஆகியன நடந்தது. இதில், திரளாக  பக்தர்கள் அலகு குத்தி வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில், பொங்கல் வைபவம்,  அம்மனுக்கு தங்க கவச சாத்துபடியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் அக்னி கரகம், பூங்கரகம், காளியம்மன் வேடம், காட்டேரி ஊர்வலம்,  அலகு குத்துதலுடன் ஊர்வலத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். குகை காளியம்மன் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைபவம், அலகு  குத்துதல், அக்னி கரகம் எடுத்து வந்து வழிபட்டனர். மாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.  சேலம் அம்மாபேட்டை பலபட்டரை  மாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.   பொன்னம்மாபேட்டை புதுத் தெரு மாரியம்மன் உட்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  வழிபட்டதோடு, விடிய விடிய நேர்த்திக் கடன் செலுத்தினர். இதனால், கடந்த இரண்டு நாட்களாக சேலம் மாநகர் தூங்கா நகரமாக மாறியது.  இன்றும், நாளையும் பக்தர்கள் பொங்கல் வழிபாடு தொடரும் நிலையில், இன்று குகை மாரியம்மன் கோவிலிலும், நாளை அம்மாபேட்டை மாரிய ம்மன் கோவிலிலும் வண்டி வேடிக்கை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !