உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா!

வடபழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா!

வடபழனி :வடபழனி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வரும் 8ம் தேதி, அதிகாலை 4:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை, சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அன்று, அதிகாலை பூஜைகள் முடிந்தவுடன், காலை 4:00 முதல் 12:00 மணி வரை, வெள்ளி கவச அலங்கார தரிசனம் நடைபெறும். மதியம் 1:00 முதல், மாலை 4:00 மணி வரை, தங்க கவச அலங்காரமும், மாலை 4:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை, சந்தனக் காப்பு, புஷ்ப அலங்கார தரிசனமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !