பு.கொணலவாடி கிராமத்தில் 70 அடி உயர மகமேறு வீதியுலா
ADDED :3801 days ago
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கொணலவாடி கிராமத்தில் 70 அடி உயர மகமேறு வீதியுலா நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஐயனார் கருமியம்மன் சுவாமி கோவில் தேரோட்ட விழா, வரும் 12ம் தேதி நடக்கிறது. முன்னதாக கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஐயனார் சுவாமி குதிரை வாகனத்திலும், கருமியம்மன் சுவாமி கேடயத்திலும், விநாயகர் சுவாமி எலி வாகனத்திலும், காத்தவராயன் மற்றும் மாரியம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது.வரும் 10ம் தேதி இரவு 10:00 மணிக்கு, 70 அடி உயரத்தில் மகமேறு வீதியுலா நடக்கிறது. மறுநாள் (11ம் தேதி) மதியம் 2 மணிக்கு உச்சிமலி(எல்லைக்கு சென்று தீபாராதனை வழிபாடு) வழிபாடும், 12ம் தேதி மதியம் 3:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.