பாதூர் ஐயனார் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
ADDED :3732 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் பூர்ண புஷ்கலாம்பிகை சமேத ஐயனார் கோவில் மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் ஸ்ரீபூர்ண புஷ்கலாம்பிகை சமேத ஐயனார் கோவில் மகா கும்பாபிஷேகம், கடந்த ஜூன் 29ம் தேதி நடந்தது. தொடர்ந்து மண்டல அபிஷேகங்கள் நடந்தது. மண்டல அபிஷேக நிறைவு விழாவில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பூஜைகளை அருணாச்சல குருக்கள், மோகனசுந்தர குருக்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா கண்ணன் செய்திருந்தார்.நீர் பாசன சங்க தலைவர் சம்பத் ஐயர், ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரிரமேஷ், துணை தலைவர் ராமலிங்கம், முன்னாள் தலைவர்கள் மணி ஐயர், ராமசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன் ஐயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.