சக்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்கார வழிபாடு
ADDED :3809 days ago
அவலூர்பேட்டை: வளத்தியில் சக்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்கார சிறப்பு வழிபாடு நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தி அரசமரத்தெருவில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது.