பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் சுமங்கலி பூஜை!
ADDED :3730 days ago
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், ஆடிவிழாவையொட்டி, சுமங்கலி பூஜை நடந்தது. பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி ÷ காவிலில் சங்கடகர சதுர்த்தி விழாவில் காலை 9.00 மணிக்கு, மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 8.00 மணிக்கு பால கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காவிரி தாய் வடிவில் அம்மன் அலங்கரித்து, 1008 லலிதா சகஸ்கரநாம அர்ச்சனைகள் செய்து மகா தீபாராதனை நடந்தது. வேதா பெண்கள் நற்பணி மன்றம் சார்பில் நடந்த சும ங்கலி பூஜையில், அமைச்சர் தியாகராஜன், சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கினார். ஏற்பாடுகளை நற்பணி மன்ற தலைவி நாக÷ ஜாதி செய்திருந்தார்.