உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிவெள்ளி பூஜை மழை வேண்டி பொங்கல்!

ஆடிவெள்ளி பூஜை மழை வேண்டி பொங்கல்!

கூடலூர்: கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில், ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. மகாலட்சுமி அம்மனுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சசுருளிமலை -பழனிமலை பாதயாத்திரை பெண்கள் பக்தர்கள் குழுவினர் பஜனைப் பாடல்கள் பாடினர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. கூடலூர் முதல்வார்டு மந்தையம்மன் கோயிலில் மழை வேண்டிய பொங்கல் வைத்து, கூழ் காய்ச்சினர். மழை பெய்து பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர வேண்டும் என வழிபட்டனர். பொதுமக்கள் அனைவருக்கு பொங்கல் மற்றும் கூழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !