உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு கோலோச்சும் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

சுயம்பு கோலோச்சும் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

துறையூர்: ஆடி கிருத்திகையையொட்டி, துறையூர் சுயம்பு கோலோச்சும் முருகன் கோவிலில், 31வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. மூங்கில் தெப்பக்குளத்தில் இருந்து பாலக்கரை, திருச்சி சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியாக பால்குடம், காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஜானகி ராம் சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில், சந்தனகாப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். கரட்டுமலை முருகன் கோவில், சிவன் கோவில், சிக்கம்பிள்ளையார் கோவில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களிலுள்ள முருகப்பெருமானுக்கு கிருத்திகை விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !