படியளக்கும் பெருமாள் என்று சொல்வது எதனால்?
ADDED :3794 days ago
அளந்த படி தானே கிடைக்கும். அதிக வரம் கேட்டால் எந்த சாமி கொடுக்கும்? என்று ஒரு சுலவடை உண்டு. அவரவர் பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப பெருமாளே மரக்கால் கொண்டு படி அளக்கும் பெருமாள், பின் அந்த மரக்காலையே தனக்கு தலையணையாக்கி யோக நித்திரையில் ஆழ்ந்து இருப்பதாகச் சொல்வர். துõத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதிகளில் திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாளும், கீழ் திருப்பதியிலுள்ள கோவிந்த ராஜரும் மரக்காலை தலைக்கு வைத்திருப்பதைக் காணலாம். சிவபெருமானும் படியளந்தருளிய லீலை நடத்தியதாக திருவிளையாடல் கூறுகிறது. இதற்கான விழா மார்கழி அஷ்டமியில் கோவிலில்களில் நடக்கும். ஆட்டுக்கு வாலை அளந்து வைச்சவன் புத்திசாலி என்பது நம்மை நம்மைப் படைத்த கடவுளைத் தான் குறிக்கிறது.