உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை மூடல்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை மூடல்!

ராமேஸ்வரம்: ஆடித் திருக்கல்யாண விழாவை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆக., 17, 23 ல் நடை மூடப்படும், என கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஆடி தபசு நாளான ஆக., 17 ல் அதிகாலை 2 மணிக்கு, கோயில் நடை திறக்கப்பட்டு காலை 3 முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதன்பின் கால பூஜையும் நடைபெறும். காலை 6 மணிக்கு, பர்வத வர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் எழுந்தருளி, தபசு மண்டகப்படிக்கு புறப்பட்டதும், கோயில் நடை மூடப்படும். பின்னர், பகல் 12 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, மாலை 3 முதல் 4 மணிக்கு தபசு மண்டகப்படி சென்றதும், அங்கு மாலை மாற்றுதல், மகா தீபாராதனை நடைபெறும். மாலை 5 மணிக்கு கோயிலுக்கு சுவாமி, அம்பாள் திரும்பியதும் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடக்கும்.இதேபோல் ஆக.,23ல் காலை 2 மணிக்கு கோயில் நடை திறந்து காலை 3 முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை, கால பூஜைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பட்டதும், கோயில் நடை மூடப்படும். இரவு 10 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்பட்டு, அர்த்தசாம பூஜைகள் நடக்கும், என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !