உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா?

ஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா?

ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவை யே ஏழுபிறவிகள்.

இதை

புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
எம்பெருமான்

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !