உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2016ம் ஆண்டுக்கான திருப்பதி டைரி, காலண்டர் வேண்டுமா?

2016ம் ஆண்டுக்கான திருப்பதி டைரி, காலண்டர் வேண்டுமா?

திருப்பதி: 2016ம் ஆண்டுக்கான திருப்பதி காலண்டர் மற்றும் டைரி ரெடியாகிக்கொண்டு இருக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் ரூ100 விலையில் டைரி மற்றும் ரூ75 விலையில் 12 பக்க காலண்டர் வௌியிடுவது வழக்கம். வழுவழு தாளில் தேவியருடன் பெருமாள் சர்வ அலங்காரத்தில் வீற்றிருக்கும் காலண்டரும், பல்வேறு அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய டைரியையும்  புத்தாண்டு பரிசாக பலரும் கொடுத்து மகிழ்வர். இந்த காலண்டர் மற்றும் டைரி திருமலையிலும் மற்றும் திருமலை கோவிலின் நிர்வாகத்திற்கு உள்பட்ட கோவில்களிலும் மட்டுமே கிடைக்கும், வெளியிடங்களில் விற்பனை செய்வது கிடையாது. ஆகவே விற்பனை நோக்கமின்றி தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள் தேவையெனில் asst eo,sales wing publication,press compound,kt road,tirupathi -517501 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !