சேஷ வாகனத்தில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா!
ADDED :3907 days ago
விருத்தாசலம்: ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, விருத்தாம்பிகை அம்மன் சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, தினமும் காலை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் ஆழத்து விநாயகர், விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.