உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் தேரோட்டம்

காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் தேரோட்டம்

பெருந்துறை: காஞ்சிக்கோவில் ஸ்ரீசீதேவியம்மன் திருவிழா கடந்த 7ம் தேதி துவங்கியது.14ம் தேதி அதிகாலை அக்னிக் குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைத்தல் நடந்தது. பக்தர்கள் தங்கள் நேர்ச்சை கடனுக்காக குண்டம் இறங்கி, இறைவனை வழிப்பட்டனர். காலை 11 மணியளவில் அக்னி அபிஷேகம், இரவு 10 மணியளவில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசீதேவியம்மன் ரதம் ஏறுதல் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. இரவில் முத்துப் பல்லக்கில் ஸ்ரீசீதேவியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார். நேற்று காலை மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் திருவிழா நிறைவு பூஜை நடந்தது.ஏற்பாடுகளை தக்கார் கொழந்தாயாள், செயல் அலுவலர் ஈஸ்வரி, காஞ்சிக்கோவில் செம்பொன்குலம், முளசி கண்ணகுலம், கண்ணகுலம், முதன்மைக் கவுண்டர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !