நல்வழி காட்டும் கருப்பர்
ADDED :3726 days ago
கருப்பர் வாரார் கருப்பர் வாரார் கருப்பர்சாமி
கருப்புச் சட்டை அணிந்து வாரார் கருப்பர்சாமி
கண் கொள்ளா காட்சியய்யா கருப்பர்சாமி
காலமெல்லாம் காத்து வாரார் கருப்பர்சாமி
திருப்புத்தூரில் அமர்ந்தவனே கருப்பர்சாமி
திவ்யமான தெரிசனமாம் கருப்பர்சாமி
கோட்டையிலே வாழ்பவனே கருப்பர்சாமி - எங்கள்
குலதெய்வம் ஆனவனே கருப்பர்சாமி
சங்கிலியான் முன்னே செல்ல கருப்பர்சாமி
சங்கடங்கள் நீங்குதையா கருப்பர்சாமி
காளியம்மா ராக்காயி பேச்சியுடன் கருப்பர்சாமி - நம்மை
இராப் பகலா காத்துவாரார் கருப்பர்சாமி
அரிவாளும் கையுடனே கருப்பர்சாமி - நம்மை
அன்பாக ஆதரிப்பர் கருப்பர்சாமி
அழகான குதிரையிலே கருப்பர்சாமி - அவர்
ஆணையிட்டுக் கொண்டு வாரார் கருப்பர்சாமி
நாட்டினிலே நாம் உயர கருப்பர்சாமி- நீ
நல்லவழி காட்டிடுவாய் கருப்பர்சாமி