குலம் காக்கும் கருப்பர்
ADDED :3715 days ago
சிறுவயது முதற்கொண்டே திருப்புத்தூர் கருப்பரை நான்
தினந்தோறும் வணங்கி வந்தேன்
இருவிழிகள் திறந்த உடன் சங்கிலிக் கருப்பரையும்
சத்தியமாய் வணங்கி வந்தேன்
காலையில் எழுந்ததும் கருப்பரை வணங்கியே
காரியம் துவங்கு கின்றேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
காட்சி தர வேண்டுமய்யா
மனதிலே நிம்மதி இல்லாத வேளையில் - உன்
மந்திரம் சொல்லி வந்தால்
மாமன்னன் கருப்பன் நீ மங்களம் உண்டென்று
மார்தட்டி வந்து நிற்பாய்!
குழந்தையின் குற்றத்தைக் குறையாக எண்ணாது
குதிரைமேல் ஏறிவருவாய்
குலதெய்வம் நீ என்று கும்பிட்டு வருகின்றோம்
குலம் காக்க வேண்டுமய்யா.