உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலைக் கருப்பன் வரான்!

சபரிமலைக் கருப்பன் வரான்!

கருப்பன் வரான் எங்கள் கருப்பன் வரான்
கருஞ்சட்டை கட்டிக்கொண்டு கருப்பன் வரான்

காடான காடு விட்டு கருப்பன் வரான்
காக்கும் கடவுளாக கருப்பன் வரான்    (கருப்பன்)

காலாடி சாமியுடன் கருப்பன் வரான்
காலில் சதங்கையுடன் ஓடி வரான்        (கருப்பன்)

சன்னாசி சாமியுடன் ஓடி வரான்
சங்கடங்கள் தீர்க்கவே ஓடி வரான்        (கருப்பன்)

மாடான மாட பக்தியுடன் கருப்பன் வரான்
மக்களையே காத்திட ஓடி வரான்        (கருப்பன்)

மஞ்ச மாதா தேவியுடன் கருப்பன் வரான்
மாந்தர்களும் உய்யவே ஓடி வரான்    (கருப்பன்)

கோட்டை மலையாண்டி கருப்பன் வரான்
கோடான கோடியை காக்க வரான்        (கருப்பன்)

கருப்பு மீசையோடு கருப்பன் வரான்
காப்பாற்ற வேண்டியே ஓடி வரான்    (கருப்பன்)

மின்னும் ஒளிபோல கருப்பன் வரான்
மீளாத்துயர் நீக்கவே ஓடி வரான்        (கருப்பன்)

பதினெட்டாம்படி படியோன் கருப்பன் வரான்
பக்தர்களைக் காக்கவே ஓடி வரான்    (கருப்பன்)

வாபர் சாமியுடன் கருப்பன் வரான்
வாக்குகள் தந்திடவே ஓடி வரான்        (கருப்பன்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !