உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனதுர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!

வனதுர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா!

கள்ளக்குறிச்சி: காரனூர் வனதுர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த காரனூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வனதுர்கா கோவிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. இதனையொட்டி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து காலை 9:30 மணிக்கு வனதுர்க்கை அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !