தர்மபுரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி: தர்மபுரி, கொட்டாய் தெரு செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (20ம் தேதி) நடக்கிறது. நேற்று காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், மாலையில் கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை, மஹா பூர்ணாகதி நடந்தது. இன்று காலை, 9 மணிக்கு இரண்டாம் காலை யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், இரவு, 7.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, மஹா பூர்ணாகதி, தீபாராதனை நடக்கிறது. நாளை, காலை, 7.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜையும், 8.30 மணிக்கு மேல் கலச புறப்பாடும், விநாயகர் செல்வமுத்து மாரியம்மன், முருகன் நவகிரகம் கும்பாபிஷேகம், தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது. நெல்லிநகர், கோட்டை மாரியம்மன் கோவில், சபேச குருக்கள் தலைமை வகித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். மாலை, 5 மணிக்கு ஸ்வாமி திருவீதி விழா நடக்கிறது. 21ம் தேதி முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.