மகப்பேறு வழிபாடு!
ADDED :4099 days ago
நாக தோஷத்தால் குழந்தை இல்லாதவர்கள் திங்கள் கிழமைகளில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் மற்றும் பாம்பு சிலைகளை ஏழுமுறை சுற்றி வந்து வழிபடுவர். இந்த பாம்புச் சிலையில் இரு பாம்புகள் இணைந்த நிலையில், நடுவில் ஒரு சிவலிங்கம் இடம் பெற்றிருக்கும். இந்த இரு பாம்புகளும் கணவன், மனைவியைக் குறிக்கும். கணவனும், மனைவியும் இணைந்து சிவலிங்கத்தை தரிசித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இப்படி சிலை வடித்தனர். குழந்தைப் பேறு வேண்டியும், ராகு கேது தோஷம் நீங்கவும் அரச மரத்தடியில் இந்தச் சிலையை பிரதிஷ்டை செய்யும் வழக்கமும் உண்டு.