சிறுவாபுரி வள்ளி மணவாள பெருமானுக்கு செப்.6ல் திருக்கல்யாணம்!
சிறுவாபுரி: திருமண தடைகளை எல்லாம் போக்கி, திருமணத்தை உரிய காலத்தில் நினைத்தபடி நடத்தி மகிழ்வு அடைய வகை செய்யும் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். திருமண பிரார்த்தனை நிறைவேற, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து, 6 வாரமும் ஏதாவது ஒரு கிழமையில் வரவேண்டும். அப்படி ஆறு வாரமும் வரமுடியாத பக்தர்களுக்காக, வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோற்சவம் நடைபெறும். திருமண பிரார்த்தனைக்காக வந்துள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும், மணக்கோலத்திலுள்ள வள்ளி மணவாள பெருமான் முன்னிலையில் தரப்படும் மாலையை, திருமண மாலையாக கருதி அணிந்து கொண்டு. வலம் வரும் சுவாமியை பின் தொடர்ந்து வந்து வழிபட வேண்டும்.
இந்த பிரார்த்தனையை சிரத்தையுடன் முடித்துவிட்டு செல்பவர்களுக்கு. அடுத்த கல்யாண மஹோற்சவத்திற்குள். திருமணம் கைகூடுவது நிதர்சனமான உண்மை எனக்கூறுகின்றனர் பக்தர்கள். இந்த வகையில், வரும் செப்.6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வள்ளி கல்யாண மஹோற்சவம் நடக்கிறது.
(6.9.2015) ஞாயிற்றுக்கிழமை.. நிகழ்ச்சி நிரல்:
காலை: 6.00 மணிக்கு- விநாயகர், ஆதிமூலவர் அண்ணாமலையார் அம்மன் அபிஷேகம்
காலை: 6.30 மணிக்கு- மூலவருக்கு அபிஷேகம்
காலை: 9.00 மணிக்கு- வள்ளிமணவாள பெருமானுக்கு அபிஷேகம்
காலை: 10.00 மணிக்கு- திருக்கல்யாணம்
காலை: 11.00 மணிக்கு- சுவாமி புறப்பாடு
மதியம்: 12.00 மணிக்கு- கல்யாண விருந்து, கோசை நகரான் திருகயிலாய திருக்கூட்டம் சிவபூத கணங்கள் இசைக்கும் திருக்கயிலாய இசை
தொடர்புக்கு: அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு, சென்னை.
Email: annamalaiyar.net@gmail.com