உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை நடக்கும் போது கண் திறந்து பாருங்க!

பூஜை நடக்கும் போது கண் திறந்து பாருங்க!

கடவுளை நேரில் பேசும் பாக்கியம் நமக்கு இல்லை. இருந்தாலும், அவரைக் கண்களால் கண்டு மகிழ வேண்டும். நன்மையெல்லாம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் கோவில்களில் சிலையாக முன்னோர் வடித்துள்ளனர். கால வெள்ளத்தில், வீடுகளில் படம் வைத்து வணங்க ஆரம்பித்தோம்.ஆனால், பூஜை நடக்கும் போது பரவசநிலையில் இருப்பது போல், மனதில் பாவனை செய்து கொண்டு சிலர் கண்ணை மூடிக்கொள்கிறார்கள். இதன் மூலம் அவருக்கு நடக்கும் அபிஷேகம், தீபாராதனை முதலியவற்றைப் பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுகிறார்கள். கோவிலில், சுவாமியின் முடி முதல் அடி வரை கண்களால் தரிசித்து மகிழ வேண்டும். என்பதற்காகவே, இருண்ட கருவறையில் தீபாராதனை காட்டப்படுகிறது. ரங்கநாதரின் அழகில் மனம் பறி கொடுத்த திருப்பாணாழ்வார், அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று பாடியுள்ளார். திருப்பதியில், குலசேகர ஆழ்வார் கல்படியாகக் கிடக்கிறார். இருந்தாலும், படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்று பாடுகிறார். பூஜையின் போது நடக்கும் எல்லா சடங்குகளையும் கண் திறந்து பாருங்கள். கண்கள் கடவுளைக் காண்பதற்கும், காதுகள் பக்திப் பாடல்களைக் கேட்பதற்கும், மனம் பக்தி பரவசத்தில் மூழ்குவதற்குமே நமக்கு ஆண்டவனால் தரப்பட்டுள்ளது. அவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !