சின்னசேலம் செல்வகணபதி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா!
சின்னசேலம்: சின்னசேலம் சித்தி விநாயகருக்கும், அரச மரம் செல்வகணபதிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சின்னசேலம் ஆர்யவைசிய சமூகத்தின் வாசவி பூங்காவில் உள்ள சித்திவிநாயகருக்கும், அரச மரம் செல்வகணபதிக்கும், நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை யாக சாலை பூஜைகள் துவங்கியது. நேற்று கணபதி பூஜை, வேத பாராயணம், கணபதி ஹோமத்துடன் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து க@ணஷ் சர்மா தலைமையில், சித்திவிநாயகருக்கும், அரச மரம் செல்வகணபதிக்கும் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில் சமூக தலைவர் விட்டேல், நிர்வாக தலைவர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் ரவீந்திரன், ராமதாஸ், ராஜ்குமார், நிர்வாகிகள் பாலமுருகன், சுரேஷ், காளி, சரவணன், முத்து, ஆர்ய வைசிய இளைஞர் சங்கத்தினர், ஆர்ய வைசிய மகிளாசபா வாசவி கிளப், வனிதா கிளப் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.