விழுப்புரம் ஆனந்த வரதராஜருக்கு மகா கும்பாபிஷேகம்!
ADDED :3754 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள தேவி, பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள், விமானம், விநாயகர், ஆஞ்சநேயர், கருடன் மற்றும் புதிய மண்டபத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகம், உக்த ஹோமம், 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடந்தது. தொடர்ந்து 8:45 மணிக்கு கடம் புறப்பாடு, 9:15 மணிக்கு விமானத்திற்கு, கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 7:30 மணிக்கு வரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவியோடு சன்னதி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை நாட்டாண்மை ஜெயபால் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.