ரெட்டிக்குப்பம் ரேணுகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :3754 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ரெட்டிக்குப்பம் ரேணுகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம், ரெட்டிக்குப்பத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி, வினாயகர்,பாலமுருகன், ராஜராஜேஸ்வரி , வைஷ்ணவி, துர்க்கை, அய்யப்பன், நவக்கிரக கோவில்கள் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட் டது. இதன் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9.35 மணிக்கு இரண்டாம் காலயாக சாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடு நடந்தது. கோவில் கலசங்களுக்கு தொரவி அரிகர சர்மா புனித நீர் ஊற்றினார். ஊராட்சி தலைவி கிரிஜா முரளிதரன் தலைமையில் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.