திண்டுக்கல் ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3754 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கம், ஐயப்ப பக்தர்கள் அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட மலையடிவார ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆக., 19 இரவு முதல்கால யாக பூஜை, ஆக., 20 ல் மகா கணபதி ஹோமம், 2 ம்கால யாக பூஜை, கோ பூஜை, 3ம் காலயாக பூஜை, சிலைகளுக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு பரிவார தெய்வங்களின் பீடம், கலசங்களுக்கு பூஜை, 4 ம் கால யாக பூஜை நடந்தன. பகல் 1 மணிக்கு ஐயப்ப சுவாமி கோயில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனையும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலாவும் நடந்தன. கலெக்டர் ஹரிஹரன், பாலபாரதி எம்.எல்.ஏ.,-மேயர் மருதராஜ், வர்த்தக சங்க துணைத்தலைவர் சுந்தரராஜன் பங்கேற்றனர்.