உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல பாதையை தேர்ந்தெடுங்கள்!

நல்ல பாதையை தேர்ந்தெடுங்கள்!

உங்கள் பாதையைதேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் நபிகள் நாயகம்.ஒருமுறை நபிகள் நாயகம் மக்களிடையே பேசும்போது, உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டு விட்டது,என்றார்.உடனே மக்களில் சிலர்,அப்படியானால், நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஒப்புக் கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?என்றனர்.அதற்கு நாயகம், யார், தனது பொருளை செலவு செய்து இறைவனுக்கு பயந்து நன்மையான செயல்களை செய்கிறாரோ, அவருக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து, இறைவனால் சொல்லப்பட்டதை அலட்சியம் செய்கிறானோ, அவனுக்கு துன்பம் மிகுந்த நரக வாழ்க்கைக்குரிய பாதை காட்டப்படுகிறது,என்றார். இறைவன் நமக்குதந்துள்ளவற்றில், இந்த இரண்டில் எது நல்லது என இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். அந்தநல்ல பாதையில் நாம்செல்லலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !