சின்ன பொன்னம்பூண்டி கோவிலில் தீமிதி விழா
ADDED :5228 days ago
செஞ்சி : சின்ன பொன்னம்பூண்டி திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா நடந்தது.செஞ்சி தாலுகா சின்னபொன்னம்பூண்டி திரவுபதியம்மன் கோவில் திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வந்தது. இரவு மகாபாரத சொற்பொழிவும், தெரு கூத்தும் நடந்து வந்தது. கடந்த 11ம் தேதி காப்பு கட்டி மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் விழாவும், 14ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், அன்று மாலை 5 மணிக்கு தீமிதி விழாவும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஊராட்சி தலைவர் கலா அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ஜெயபாலன், முன்னாள் தலைவர் திருவேங்கிடம் கலந்து கொண்டனர்.