பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
ADDED :3798 days ago
சித்தார்கோட்டை: சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் ஆவணி ஞாயிறை முன்னிட்டு 1008 லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளி செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.