கோவில்பட்டியில் செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்!
ADDED :3768 days ago
தூத்துக்குடி: கோவில்பட்டியில் உலக நலன்வேண்டி மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. கோவில்பட்டியில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில், உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும், இயற்கை சீற்றங்கள் குறையக்கோரியும் 600 க்கும் மேற்பட்ட செவ்õடை பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம் சென்றனர். இதில் 51 பக்தர்ள் முளைப்பாரியும், 21 அக்கனி சட்டியும், 21 பெண்கள் மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் இந்திரா நகரில் துவங்கி காந்திநகர், திலகர் நகர் வழியாக வார வழிபாட்டு மன்றத்தை சென்றடைந்தது.