உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணி மாதா ஆண்டு பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

வேளாங்கண்ணி மாதா ஆண்டு பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

வேதாரண்யம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில், ஆண்டுப் பெருவிழா கோலாகலமாக நாளை துவங்குகிறது. பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை சூசைமாணிக்கம் ஆகியோர் தலைமையில், தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், 29ம் தேதி, மாலை, 6 மணியளவில் கொடியேற்றி, விழாவைத் துவக்கி வைக்கிறார். முன்னதாக, மாலை, 5.30 மணியளவில் மாதா உருவம் பொறித்த திருக்கொடி ஊர்வலமும், அதைத் தொடர்ந்து, பேராலய முகப்பில், திருக்கொடி புனிதம் செய்யப்பட்டு ஏற்றப்படுகிறது பல்வேறு பகுதியிலிருந்தும் யாத்திரியர்கள், பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிமித்தமாக விரதமிருந்து, பல நாட்கள் நடந்தே வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். பஸ், ரயில்களிலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். விழா எற்பாடுகளை, தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம் மற்றும் உதவி பங்கு தந்தை ஆரோக்கிய சுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !